Published : 25 Apr 2022 07:06 AM
Last Updated : 25 Apr 2022 07:06 AM
சென்னை: குழந்தைகளின் பொழுதுபோக்கான தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்க இணையவழியிலான கோடைகால முகாம், சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் சார்பில் ஏற்பாடு செய்துள்ளது.
வரும் மே 2-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை காலை 10.30 மணி முதல் 12.45 மணி வரை 5 பிரிவுகளில் முகாம்கள் நடைபெற உள்ளன.
இதில் கலந்து கொள்வதற்கு இம்மாதம் 25-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இம்மாதம் 30-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள 8 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ரூ.250 பதிவு கட்டணமாக செலுத்தி இதில் பங்கேற்கலாம்.
பதிவு கட்டணத்தை காசோலையாகவோ, வரைவோலையாகவோ தலைமை தபால் அதிகாரி, அண்ணாசாலை தலைமை தபால் நிலையம், சென்னை- 600 002 என்ற பெயரில் எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தலைமை தபால் அதிகாரி, அண்ணாசாலை தலைமை தபால் நிலையம், சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களை 044-28543199 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என, சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலைய அதிகாரி முரளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT