Published : 25 Apr 2022 07:41 AM
Last Updated : 25 Apr 2022 07:41 AM

செங்கையில் 2,373 கிளைகளிலும் பிரதமரின் உரையை கேட்க ஏற்பாடு செய்ய வேண்டும்: பாஜக தலைவர் அறிவுறுத்தல்

தாம்பரம்: பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக பதவியேற்ற 2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ‘மன் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

இதில் 88-வது நிகழ்ச்சியாக நேற்று பிரதமர் மோடி வானொலி மூலம் பொது மக்களுக்கு உரையாற்றினார். செங்கல்பட்டு மாவட்ட பாஜக சார்பில் நெடுங்குன்றம், பாலையா கார்டன் பகுதியில் எல்இடி திரை அமைக்கப்பட்டு பிரதமரின் உரையை பொதுமக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அகில இந்திய பொதுச் செயலாளர் சி.டி.ரவி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: அடுத்த மாதம் நடைபெற உள்ள ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 2,373 பாஜக கிளைகளிலும் மக்கள் கேட்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள 67,000 கிளைகளிலும் பிரதமரின் உரையை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பிரதமரின் உரையை டீக்கடைகள், வீடுகள், மரத்தடிகளில் பொதுமக்கள் காணும்படி செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x