Published : 25 Apr 2022 06:04 AM
Last Updated : 25 Apr 2022 06:04 AM
புதுச்சேரி: புதுச்சேரி கம்பன் கலையரங்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக் கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடக்க விழா நேற்றுநடைபெற்றது. மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா பங்கேற்று ரூ.3.5 கோடி மதிப்பில் புதுச்சேரிபழைய துறைமுக வளாகத்தில் உள்ள 3 கிடங்குகள் புனரமைக்கப்பட்டு கடற்கரை நடைபாதையோடு இணைத்து மறுபயன்பாட் டுக்கு கொண்டு வரும் திட்டம், ரூ.6.07 கோடியில் முருங்கப்பாக்கத்தில் மேம்படுத்தப்பட்ட பிரெஞ்சு-தமிழ் கைவினை கிராமத் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.31 கோடியில் பழைய பேருந்து நிலையத்தை புனரமைத்தல், ரூ.15.75 கோடியில் இசிஆர் சாலையில் புதிய பேருந்து நிலையம் கட்டமைத்தல், ரூ.157.50 கோடியில் பெரிய வாய்க்காலை ஆழப்படுத்தி மீண்டும் மேம்படுத்துதல், ரூ.15.75 கோடியில் தாவரவியல் பூங்காவை மேம்படுத்துதல், ரூ.5.25 கோடியில் நகர வனப்பகுதியில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் புதிய சுற்றுலாத் திட்டம், குமரகுருபள்ளத்தில் ரூ.45.50 கோடி மதிப்பில் 216 தொகுப்பு வீடுகள் கட்டுதல், ரூ.33.45 கோடியில் புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியில் புறவழிச் சாலை அமைத்தல், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.48.66 கோடி மதிப்பில் மூன்று புதிய கட்டிடங்கள் கட்டுதல் என மொத்தம் ரூ.362.91 கோடி மதிப் பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் ஆளுநர் தமிழிசை பேசியதாவது: புதுச்சேரியில் 16,75,271 தடுப்பூசி கள் போடப்பட்டிருக்கிறது. காணொலி வாயிலாக மட்டுமே கண்டவற்றை இன்று நேரடியாக பார்க்க முடிகிறது. அதற்கு தடுப் பூசி தான் காரணம்.
வணிகம், வேலைவாய்ப்பு, ஆன் மிகம், சுற்றுலா எல்லாவற்றிலும் புதுச்சேரி முதன்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் 'பெஸ்ட்' என்று தெளி வாகக் கூறினார். மத்திய அமைச்சர் 'டீம்' என்ற கொள்கை கொடுத்திருக்கிறார். வெளிப்படை நிர்வாகம், அதிகாரமளித்தல், தன்நிறைவு உள்ளடக்கியது. இந்த இரண்டு கொள்கைகளும் ஒன்றாகஇணைந்தால் (பெஸ்ட் - டீம்)புதுச்சேரி சிறப்பான வளர்ச்சி அடையும். புதுச்சேரி அனைத்திலும் வளர்ச்சியடைந்த மாநிலமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. பிரதமரும், உள்துறை அமைச்ச ரும் அதற்கு பக்கபலமாக இருக் கிறார்கள்.
மத்திய அரசின் வழிகாட்டுத லோடு 'புதுச்சேரி மாடல்' என்ற புதுமையான வளர்ச்சித் திட்டத்தை புதுச்சேரி பார்க்க இருக்கிறது. புதுச்சேரி வேளாண்மை இணைய வழி பரிவர்த்தனையில் தேசிய அளவில் விருது பெற்றிருக்கிறது. மழைபோல அரசாட்சி நடைபெற வேண்டும் என்பார் திருவள்ளுவர். மத்திய அரசில் பிரதமரும், மாநில அரசில் முதல்வரும் மழையாக இருந்து வருகிறார்கள். அமைச் சர்கள் முதல்வருக்கு உற்ற துணை யாக இருக்கிறார்கள்.
இன்றைய நிகழ்வு புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய மைல் கல். யாரெல்லாம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ அவர்கள் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு எதிராக இருப்பவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: கடந்த ஆட்சிக் காலத்தில் செய்யமுடியாத அனைத்து திட்டங்களை யும் நாம் இப்போது செய்து கொண்டிருக்கிறோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசு நமக்கு ஒதுக்கிக் கொடுத்த நிதி கடந்தஆட்சியில் செலவு செய்யப்பட வில்லை.
நம்முடைய அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ.600 கோடிக்கு மேலான திட்டங்களை உள்துறைஅமைச்சர் மூலம் இப்போது தொடங்கியுள்ளோம். மத்திய அரசு ஒத்துழைப்போடு எத்தனையோ திட்டங் களை செயல்படுத்தியுள்ளோம். பல துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
புதுச்சேரிக்கு கொடுக்க வேண் டிய நிதியை மத்திய அரசு கொடுத்து கொண்டிருக்கிறது. மேலும் நிதி வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அதையும் நிச்சயமாக பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இப்போது பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் ரூ.1.50 லட்சத்து டன், காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தின் ரூ.2 லட்சத்தையும் இணைத்து ரூ.3.50 லட்சமாக வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மக்கள் வீடு கட்ட ரூ.5.50 லட்சம் வழங்கப்படுகிறது. மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்று புதுச்சேரியை சிறந்த மாநிலமாக கொண்டு வருவோம். புதுச்சேரி மாநில அந்தஸ்து நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதையும் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிச்சயமாக மத்திய அரசு நமக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
சுற்றுலாவை மேம்படுத்தி நம்முடைய வருவாயை உயர்த்துவ திலும் அரசு கவனம் செலுத்தும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT