Published : 25 Apr 2022 06:26 AM
Last Updated : 25 Apr 2022 06:26 AM

கடலாடி அருகே நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மீனவர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி பங்கேற்பு

வாலிநோக்கம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் வாயில் கருப்புத்துணி கட்டி பங்கேற்ற மீனவர்கள், மீனவ பெண்கள்.

ராமநாதபுரம்: கடலாடி அருகே வாலிநோக்கத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மீனவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வாயில் கருப்புத்துணி கட்டி பங் கேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே வாலிநோக்கம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது. ஊராட்சித் தலைவர் பீர்முகம்மது தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்கள் வாயில் கருப்புத் துணை கட்டி தங்கள் கோரிக்கையை குறிப்பிட்டு கோஷமிட்டனர். அவர்கள் கூறியதாவது: வாலிநோக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு உப்பு நிறுவனம் சார்பில் தனியாருக்கு ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதி தெப்பம் தரவை பகுதியில் தேங்கியுள்ள உபரி நீரில் மீன்பிடிக்க டெண்டர் விடப்படுகிறது. டெண்டர் ஒதுக்கீடு செய்யபட்ட இடத்துக்கு அருகில் மீதமுள்ள தெப்பம் தரவை பகுதியில் தேங்கியுள்ள நீரில் அப்பகுதி மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர்.

இந்நிலையில் அங்கு மீனவர்கள் மீன்பிடிக்க அரசு உப்பு நிறுவனம் அனுமதிக்காததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச் சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கூறினர்.

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அழகன்குளம், வாலாந்தரவை ஊராட்சிகளில் நடந்த கிராம சபைக் கூட்டங்களில் ஆட்சியர் சங்கர்லால் குமாவத் சிறப்பு பார்வையாளராகப் பங்கேற்றார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன் குமார், உதவி இயக்குநர் ஊராட்சிகள் அருள் பிரகாஷ், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேஷ் பிரபு, செந்தாமரைச் செல்வி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x