

மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அபிராமி அம்மன் படம் மற்றும் கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது.
முன்னதாக, கோயிலில் துர்கா ஸ்டாலின் கோ பூஜை, கஜ பூஜை செய்து வழிபட்டார். பின்னர், விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன், முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்குச் சென்று, அவர் சாமி தரிசனம் செய்தார்.
சீர்காழி ஒன்றியக் குழுத் தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயமாலதி சிவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.