

விலைவாசி உயர்வுக்கு காரண மான பெட்ரோல், டீசல் விலை யை 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யும் தவறான கொள்கையை பாஜக அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகி றது என ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய 14 சட்டப்பேரவைத் தொகுதிக ளில் போட்டியிடும் அதிமுக வேட் பாளர்களை ஆதரித்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நேற்று நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசியதாவது:
விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுதான் காரணம் என திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. அகில இந்திய அளவில் பொருட்களின் தேவை மற்றும் கிடைக்கும் அளவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலைவாசி உயர்வு ஏற்படுகிறது. இதனை தீர்மானிக்கும் எந்த கொள்கையையும் மாநில அரசு நிர்ணயம் செய்ய முடியாது.
பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்ய காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு அனுமதி அளித்தது. இதனால், போக்குவரத்து செலவு அதிகரித்து பொருட்களின் விலை உயரும். இந்தத் தவறான கொள்கையைத்தான் பாஜக அரசும் கடைபிடிக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும், மத்திய அரசு கலால் வரியை உயர்த்திவிட்டது. டீசலுக்கு 13.57 ரூபாயும், பெட்ரோலுக்கு 11.77 ரூபாயும் கலால் வரியை உயர்த்தியதன் மூலம் மத்திய பாஜக அரசுக்கு கொள்ளை லாபம் கிடைக்கிறது.
பெட்ரோல், டீசல் மீது பல மாநிலங்களில் விற்பனை வரி உயர்த்தப்பட்ட போதிலும், தமிழ கத்தில் விற்பனை வரி உயர்த்தப் படவில்லை. காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு 2ஜி, நிலக்கரி, ஆதர்ஷ் என பல்வேறு ஊழல்களை செய்த தால் மக்களால் தண்டிக்கப்பட்ட கூட்டணி. திமுக - காங்கிரஸ் கூட்டணி வாக்கு கேட்டு வந்தால், அவர்களது ஊழலை சொல்லி விரட்டி அடியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கையை ஜெய லலிதா வெளியிட நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பெற்றுக்கொண்டார். புதுச்சேரிக் கான தேர்தல் அறிக்கையை முன்னாள் எம்பி கண்ணன் பெற்றுக்கொண்டார்.