Published : 24 Apr 2022 07:00 AM
Last Updated : 24 Apr 2022 07:00 AM

மின்தேவையை பூர்த்தி செய்ய 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், மின் கட்டுப்பாட்டு மையம், 24 மணி நேர நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகம் ஆகியவற்றை மின் துறைஅமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறியதாவது:

அனல் மின் நிலையங்களுக்கு ஒரு நாளுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. ஆனால், 47 முதல் 50 ஆயிரம் டன் வரை மட்டுமே வருகின்றன.

வெளிநாடுகளில் நிலக்கரி விலை உயர்ந்துள்ளது. எனவே, ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களுக்கு மட்டும் கணக்கிட்டு, 4.80 லட்சம் டன் நிலக்கரி பெற டெண்டர் கோரப்பட்டது.

அதில் பங்கேற்ற 4 நிறுவனங்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டு, விரைவில் அந்த நிலக்கரியை பெற்று உற்பத்திக்கு பயன்படுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மின் வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம், இயக்குநர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x