Published : 24 Apr 2022 07:28 AM
Last Updated : 24 Apr 2022 07:28 AM

ஸ்ரீவிஜயேந்திரரை விமர்சித்த நபரை கைது செய்ய வேண்டும் - தமிழ்நாடு பிராமண ஸமாஜம் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு பிராமண ஸமாஜத்தின் மாநில தலைவர் நா.ஹரிஹரமுத்து ஐயர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் உள்ள இந்துக்களின் ஆன்மிக குருவான காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை, சவுக்கு சங்கர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியும், இழிவுபடுத்தியும் பதிவிட்டுள்ளதை தமிழ்நாடு பிராமண ஸமாஜம் வன்மையாக கண்டிக்கிறது. இதை ஏற்க இயலாது.

எனவே, சவுக்கு சங்கர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று முதல்வரையும், ஆளுநரையும் கேட்டுக் கொள்கிறேன். வரும் காலங்களில் எவரும் இதுபோல தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தாதவாறு அரசாணை பிறப்பிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x