

தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் மாநாட்டை தொடங்கி வைக்க, ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று உதகை வந்தார்.
உதகையில் உள்ள ராஜ்பவனில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் மாநாடு நாளை (ஏப்.25) தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
வளர்ந்து வரும் புதிய உலக ஒழுங்கில் இந்தியாவின் பங்கு, 2047-க்குள் இந்தியா உலகத் தலைவராக இருக்கும் ஆகிய தலைப்புகளில் நடக்கும் இந்த மாநாட்டில், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதேஷ் குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
மாநாட்டை தொடங்கிவைக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று உதகை வந்தார். உதகை ராஜ்பவன் வந்த ஆளுநரை மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், மேற்கு மண்டல ஐ.ஜி. ரா.சுதாகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் ஆகியோர் வரவேற்றனர்..