Published : 24 Apr 2022 06:10 AM
Last Updated : 24 Apr 2022 06:10 AM

வானிலை முன்னறிவிப்பு: சில மாவட்டங்களில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இலங்கைமற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குசுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் ஏப்ரல் 24-ம் தேதி(இன்று) தென் தமிழகம், நீலகிரி,கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

வரும் 25, 26, 27-ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக் கூடும். ஏப்ரல் 23-ம் தேதி(நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் தலா 7 செ.மீ., களியல், குழித்துறை பகுதிகளில் தலா 6 செ.மீ., நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x