Published : 24 Apr 2022 06:10 AM
Last Updated : 24 Apr 2022 06:10 AM

ஆவடி - பட்டாபிராம் இடையே பராமரிப்பு பணி: மின்சார ரயில் சேவைகள் ரத்து

சென்னை

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள ஆவடி - பட்டாபிராம் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (24-ம்தேதி) இரவு 10.30 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரைபராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இன்றும், நாளையும் சில ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இதன்படி, சென்ட்ரல் - திருவள்ளூர் (இரவு 21.40 மணி), திருவள்ளூர் - ஆவடி (இரவு 10.10), பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி(இரவு 11.55) மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்றும், நாளை அதிகாலை 4.15 மணிக்கு சென்ட்ரல் -பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் (அதிகாலை 3.20) ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

சென்ட்ரல் - அரக்கோணம் (இரவு 10.05, 10.45), சென்ட்ரல் -திருவள்ளூர் (இரவு 11.15), அரக்கோணம் - சென்ட்ரல் (இரவு 9.50),திருத்தணி - சென்ட்ரல் (இரவு 9.45) ரயில்கள் இன்றும், சென்ட்ரல் -திருத்தணி (அதிகாலை 3.50),சென்னை கடற்கரை - அரக்கோணம் (அதிகாலை 4.15), சென்ட்ரல் - திருவள்ளூர் (அதிகாலை 4.30, 5), திருவள்ளூர் - சென்ட்ரல்(அதிகாலை 3.50), அரக்கோணம் - சென்ட்ரல் (அதிகாலை 3.45), அரக்கோணம் - வேளச்சேரி (அதிகாலை 4) ஆகிய ரயில்கள் நாளையும் விரைவுப் பாதையில் இயக்கப்பட உள்ளதால், இந்த ரயில்கள்இந்துக் கல்லூரி - பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x