Published : 24 Apr 2022 04:15 AM
Last Updated : 24 Apr 2022 04:15 AM

ஊழல் செய்பவர்களால் மட்டுமே இனி அரசியலில் நீடிக்க முடியும்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வேதனை

உ.சகாயம்.

மதுரை

ஊழல் செய்பவர்களால் மட்டுமே இனி அரசியலில் நீடிக்க முடியும் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தெரிவித்தார்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் கலந்துகொண்டார்.

அப்போது, செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் படித்த 90 லட்சம் இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அதை தட்டிப்பறிக்கும் வகையில் வடமாநிலத்தினர் போலி சான்றிதழ் கொடுத்து, அரசு வேலையில் சேர்வதை அரசு தடுக்க வேண்டும்.

இன்றைய இளைஞர்களிடம் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தினால் வருங்காலத்தில் ஊழலை ஒழித்து விடலாம்.

இந்திய தேர்தல் ஆணை யத்தில் பதிவு செய்து எந்த அரசியல் கட்சியையும் நான் தொடங்கவில்லை. அரசு நிர்வாகத்தில் நேர்மையாக இருப்பவர்கள், ஊழலை எதிர்ப்பவர்கள் செயல்பட முடியாது என்று முடிவெடுத்துதான், அரசு பதவியிலிருந்து விலக முடிவு செய்தேன். ஆனால், அது அரசியல் முடிவு என்பது அல்ல. அரசியலில் நுழைய வேண்டும் என நான் விரும்பியிருந்தால் பிரபல திரை நட்சத்திரங்கள் அழைத்தபோதே நான் சென்றிருப்பேன். ஆனால், ஜனநாயக முறைப்படி தேர் தல் களத்தில் போட்டியிட வேண்டும் என என்னோடு இருந்தவர்கள் ஆசைப்பட்டார்கள். அவர்களுக்காகவே பிரச்சாரம் செய்தேன்.

ஊழல் செய்பவர்களாலும், வாக்குகளைப் பெற மக்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களாலும்தான் இனி அரசியலில் இருக்க முடியும். அது எங்களால் முடியாது. நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள்.

மாணவர்களிடம் பெற்றோர், ஆசிரியர்கள் அன்போடு இருக்க வேண்டும். குறிப்பாக, பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அக்கறை யோடு பேச வேண்டும். அவர்களை கண்காணிக்க வேண்டும். சமூகமும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும். தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x