Published : 07 May 2016 08:53 AM
Last Updated : 07 May 2016 08:53 AM

முத்துப்பேட்டை அருகே சசிகலாவின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை: அதிமுக பிரமுகரின் பெட்ரோல் பங்க்குக்கு ‘சீல்’

முத்துப்பேட்டை அருகே சித்த மல்லி பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள சசிகலாவின் உறவினர் டிஏடி.அன்பழகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

ஜெயலலிதாவின் தோழி சசி கலாவின் தாய்மாமன் தங்கவேலு வின் மகன் டிஏடி.அன்பழகனின் பண்ணை வீடு திருவாரூர் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ளது.

இந்த வீட்டுக்கு வருமான வரித்துறை இணை ஆணையர் இளையராஜா மற்றும் திருவாரூர் வருமான வரித்துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று காலை சோதனையிடுவதற்காகச் சென் றது. அப்போது, வீடு பூட்டப்பட் டிருந்தது. பின்னர் அன்பழகனின் உதவியாளர் தங்கவேல்ராஜா வீட்டின் சாவியைக் கொண்டு வந்து கொடுத்தார். பின்னர் பூட்டை திறந்து சுமார் 2 மணி நேரம் அதிகாரிகள் அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

பின்னர் அங்கிருந்து அதிகாரிகள் நேற்று மதியம் புறப்பட்டுச் சென்றனர். அங்கிருந்த செய்தியாளர்கள், சோதனை குறித்து இளையராஜாவிடம் கேட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

மன்னார்குடியில் ஜெயலலிதா பேரவை திருவாரூர் மாவட்டச் செயலாளர் பொன்வாசுகிராம் வீட்டில் நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்ட நிலையில், சசிகலாவின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

602 டோக்கன்கள் பறிமுதல்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த அமைச் சர் ஆர்.வைத்திலிங்கம் போட்டி யிடுகிறார். இந்த தொகுதியில் உள்ள பாப்பாநாட்டில் அதிமுக பிரமுகரான சோழகன் குடி காட்டைச் சேர்ந்த சிவராஜாவுக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது.

தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் உள்ள இந்த பெட்ரோல் பங்க்கில், டோக்கன்கள் கொடுத்து பலரும் பெட்ரோல் நிரப்பிச் செல்வதாக தமிழக தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானிக்கு புகார் சென்றதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த அவர் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டதாகவும் கூறப்படு கிறது.

இதைத்தொடர்ந்து, ஒரத்தநாடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சகாயராஜ், டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் அடங்கிய குழுவினர், அந்த பெட்ரோல் பங்க்கில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த 602 டோக்கன்களை பறிமுதல் செய்ததுடன், பெட்ரோல் பங்க்குக்கு சீல் வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x