Published : 07 May 2016 02:54 PM
Last Updated : 07 May 2016 02:54 PM

நத்தம் தொகுதியை மீண்டும் கைப்பற்ற போராடும் அதிமுக: முதல் வெற்றியை பதிவு செய்ய திமுக முயற்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் தொகுதியை மீண்டும் கைப்பற்ற அதிமுக போராடி வருகிறது. அதே சமயம் நத்தம் தொகுதியில் இதுவரை வெற்றி பெறாத திமுக முதல் வெற்றியை பெற முயற்சி செய்து வருகிறது.

நத்தம் சட்டப் பேரவைத் தொகுதி 1977-ம் ஆண்டு உருவானது. முதல் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்.ஆண்டிஅம்பலம் வெற்றி பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற ஆறு தேர்தல்களிலும் இவரது வெற்றியை எந்த கட்சியினராலும் தடுக்க முடியவில்லை.

இந்நிலையில், 1999-ம் ஆண்டு இவரது மறைவுக்குப் பிறகு நடைபெற்ற இடைத் தேர்தலில் முதல் முறையாக நத்தம் ஆர்.விசுவநாதன் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் நான்கு முறை இவர் வெற்றி பெற்றார். நத்தம் ஆர்.விசுவநாதன் தற்போது ஆத்தூரில் போட்டியிடுகிறார்.

நத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஷாஜகான் களம் இறக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து திமுக சார்பில் எம்.ஆண்டிஅம்பலத்தின் மகன் எம்.ஏ.ஆண்டிஅம்பலம் நிறுத்தப் பட்டுள்ளார். இந்த தொகுதியில் திமுகவுக்கு கணிசமான ஓட்டு இருந்தாலும் இதுவரை வெற்றிபெற முடியவில்லை. கடந்த முறை தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 25 ஆயிரம் ஓட்டுக்களுக்கு மேல் பெற்றது, இவருக்கு இந்த முறை கைகொடுக்கும் என்று திமுகவினர் நம்புகின்றனர். அதிமுகவில் வலுவான வேட்பாளர் இல்லாதது, தனது சமூகத்தை சார்ந்த ஓட்டு, திமுக கூட்டணிக் கட்சிகள் ஓட்டு ஆகியவை பலத்தை தரும் என்று திமுகவினர் நம்புகின்றனர். இதன் மூலம் நத்தம் தொகுதியில் முதன் முறையாக வெற்றிபெற திமுகவினர் முயற்சி செய்கின்றனர்.

அதிமுக வேட்பாளர் தொகுதிக்கு நன்கு அறிமுகமா னவர். தனது கட்சிக்காரர் களையே நம்பி இருக்க வேண்டிய நிலை. இதில் சிலர் ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விசுவநாதனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சென்றுவிட்டதாக அதிமுக வினரே கூறுகின்றனர்.

அமைச்சர் விசுவநாதன் நின்றி ருந்தால் எளிதில் வெற்றி பெற்றிருக்க முடியும். தற்போது போராடித் தான் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் என்கின் றனர் அதிமுக நிர்வாகிகள்.

தேமுதிக, நாம் தமிழர், பாரதிய ஜனதா கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன.

அதிமுக, திமுக இருத ரப்பிலும் பிரச்சாரம் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. கிராமங்கள் நிறைந்த பகுதி, மலை கிராமங்கள் அடங்கிய பகுதி என்பதால் அனைத்து பகுதிகளுக்கும் வேட் பாளர்கள் சென்று பிரச்சாரம் செய்வது என்பது இயலாத காரியமாக உள்ளது.

எனவே வேட்பாளர்கள் மட்டுமின்றி நிர்வாகிகளும் முழு அளவில் பிரச்சாரம் செய்தால் தான் அதிக ஓட்டுக்களைப் பெற முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கு அதிமுக, திமுக இரு கட்சிகளும் தீவிர முயற்சி செய்து வருகின்றன. எனவே இத்தொகுதியில் அதிமுகவின் சாதனை தொடருமா?, திமுக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா? என்பதை பொறுத்தி ருந்து கவனிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x