Published : 23 Apr 2022 05:43 AM
Last Updated : 23 Apr 2022 05:43 AM

சென்னையில் வணிக வழக்குகளுக்கான நீதிமன்றம்: முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்

சென்னை: டெல்லி, மும்பை, பெங்களூருவைத் தொடர்ந்து, தமிழகத்தில் வணிக வழக்குகளுக்கான முதல் நீதிமன்றத்தை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று (ஏப். 23) திறந்துவைக்கிறார்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை 9 அடுக்குமாடிகள் கொண்ட நிர்வாக அலுவலகக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டிவைக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்துவைக்கிறார்.

தொடர்ந்து, வணிக வழக்குகளுக்கான நீதிமன்றத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து, கரோனா காலகட்டத்தில் இறந்த வழக்கறிஞர்களின் குடும்பத்துக்கான சேமநல நிதியை வழங்குகிறார்.

இந்த விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x