தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வித்துறை புதிய உத்தரவு

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வித்துறை புதிய உத்தரவு
Updated on
1 min read

மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி அனைத்து தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

பொறியியல் பாடத்தில் டிப்ளமா படிப்புகள் வழங்கும் தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் 2016-17-ம் கல்வி ஆண்டுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீ காரத்தை பெற்றிருந்தால் மட்டுமே இந்த கல்வி ஆண்டில் மாணவர் களைச் சேர்க்க வேண்டும். 2016-17-ம் கல்வி ஆண்டுக்கு ஏஐசிடிஇ அங்கீகாரம் புதுப்பிக்கப் படவில்லை என்றால் முதல் ஆண் டில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறா மல் மாணவர்கள் சேர்க்கப்பட்டால் அந்த மாணவர் சேர்க்கைக்கு கண் டிப்பாக அனுமதி அளிக்கப்படாது. மேலும், செமஸ்டர் தேர்வுக்கு பதிவுசெய்யவும் அனுமதி வழங் கப்பட மாட்டாது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in