தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் ஆட்சி அமைக்கப்போவது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் ஆட்சி அமைக்கப்போவது யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

Published on

பிற்பகலுக்குள் முடிவுகள் தெரியும் | மையங்களில் பலத்த பாதுகாப்பு

தமிழகம் உட்பட 5 மாநிலங்க ளின் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்த மாநி லங்களில் ஆட்சி அமைக்கப் போ வது யார் என்பது பிற்பகலுக்குள் தெரிந்துவிடும்.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அசாமில் 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகவும், மேற்குவங் கத்தில் 294 தொகுதிகளுக்கு ஏப்ரல் 4 முதல் மே 5 வரை 6 கட்டங்களாகவும் தேர்தல் நடந்தது. தமிழகம் (232), புதுச்சேரி (30), கேரளத்தில் (140) ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இந்த 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 5 மாநிலங்களி லும் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது பிற்பகலுக்குள் தெரிந்துவிடும். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், கேரளத் தில் இடதுசாரிகளும், அசாமில் பாஜக கூட்டணியும், புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள தாக கருத்துக்கணிப்புகள் தெரி விக்கின்றன. தமிழகத்தில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் பணப் பட்டுவாடா புகாரால் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த து. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப் பட்டு, வாக்கு எண்ணும் மையங் களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

68 மையங்கள்

தமிழகம் முழுவதும் 68 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கான வாக்குகள் லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளா கத்தில் உள்ள கிண்டி பொறியி யல் கல்லூரி ஆகிய 3 மையங் களில் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை நடக்கும் அறைகளில் பிரத்யேகமாக தடுப் புகள் அமைத்து, இரும்பு கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கு கி றது. இது தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

வாக்கு எண்ணிக்கை மையங்க ளில் தற்போது 3 அடுக்கு பாது காப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கெ னவே தேர்தலுக்காக வந்துள்ள 300 கம்பெனி துணை ராணுவப் படையினரில், 80 கம்பெனி தவிர மீதமுள்ளவர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.

இவர்களில் குறிப்பிட்ட அளவு படையினர் வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணிக்கை நடக் கும் இடம், மின்னணு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். அடுத்ததாக தமிழக ஆயுத போலீஸார், உள்ளூர் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

3,236 மேசைகள்

வாக்கு எண்ணும் பணியில் 9,621 பணியாளர்கள், 3,971 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 13,592 பேர் ஈடுபடுத்தப் பட உள்ளனர். 68 மையங்க ளிலும் 3,236 மேசைகள் போடப் பட்டுள்ளன. காலை 8 மணிக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்கு எண்ணிக்கை 500-க்கு மேல் இருந்தால், 2 மேசைகள் போடப்படும். தபால் வாக்குகள் எண்ணிக்கை முடியாவிட்டாலும், 8.30 மணிக்கு முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுவி டும். ஆனால், இறுதிச்சுற்று தொ டங்கும் முன்பு தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட வேண்டும்.

நுண் பார்வையாளர்

ஒவ்வொரு மேசையின் மீதும் கேமரா பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கைமுழுமையாக பதிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மேசைக்கும் ஒரு நுண் பார்வையாளர் நியமிக்கப்படு கிறார். அதேபோல், ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக் கையும் முழுமையாக கணினி யில் பதிவு செய்யப்பட்ட பிறகே, முடிவு அறிவிக்கப்படும். கணினி பதிவையும் ஒரு நுண் பார்வை யாளர் கண்காணிப்பார்.

வாக்கு எண்ணிக்கை மையத் துக்குள் தேர்தல் ஆணையத் தால் வழங்கப்பட்ட அனுமதி அடையாள அட்டை இல்லாவிட் டால் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மையத்துக்குள் பத்திரிகையாளர்கள் உட்பட யாருக்கும் கைபேசி வைத்துக் கொள்ள அனுமதியில்லை. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் நடந்த 232 தொகு திகளில் 3,728 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 11 மணிக்கு முன்னணி நிலவரமும், பிற்பகல் 2 மணியளவில் வெற்றி நிலவரமும் தெரிந்துவிடும்.

6 லட்சம் தபால் வாக்குகள்

தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், போலீஸார், வீடியோ கிராபர்கள், வாகன ஓட்டுநர்கள் என 6 லட்சம் பேருக்கு தபால் வாக்கு வசதி வழங் கப்பட்டுள்ளது. இதில் பதிவான வாக்குகளில், தபால் நிலையங்கள் மூலம் வந்த வாக்குகள் அதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரி மூலம், சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தபால் ஓட்டுகளை பொறுத்தவரை செல்லாதது என அறிவிக்கும் அதிகாரம் இந்த முறை தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு மட்டும் அளிக் கப்பட்டுள்ளது. உரிய சான்று ஆவணம் இல்லாதது, தவறான பதிவுகள், உறையின் எண்ணும், வாக்குச் சீட் டு எண்ணும் மாறியிருத்தல், சான் றளிக்கும் அதிகாரியின் ஒப்பம் இல்லாதது போன்ற காரணங்களால் தபால் வாக்குகள் நிராகரிக்கப்ப டலாம் என தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in