மீன்பிடி தடை 29-ம் தேதியுடன் நிறைவு: மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கோரிக்கை

மீன்பிடி தடை 29-ம் தேதியுடன் நிறைவு: மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கோரிக்கை
Updated on
1 min read

தமிழகத்தில் 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் மே 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. மீனவர்கள் திங்கட்கிழமை முதல் கடலுக்குச் செல்ல உள்ளனர். இந்நிலையில், இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண நான்காம்கட்ட பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

தமிழகத்தின் கிழக்குக் கடற் கரைப் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கடந்த மாதம் 15-ம் தேதி முதல் மே 29 வரையிலான 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட் டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை யுடன் இத்தடை நிறைவடைகிறது. மீனவர்கள் 30-ம் தேதி அதிகாலை முதல் கடலுக்கு செல்லலாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ராமேசுவரம் மீனவர் பிரதிநிதி அருளானந்தம் கூறியதாவது:

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர் களின் படகுகள் இதுவரை விடு விக்கப்படாமல் உள்ளன. இதனால் இரு நாடுகளின் மீனவர்களுக்கு இடையேயான நான்காம்கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்திய - இலங்கை அரசுகள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடிப்பதையும், படகுகளை கைப்பற்றுவதையும் நிறுத்த முயற்சி செய்ய வேண்டும். இந்திய - இலங்கை மீனவப் பிரதிநிதி களுக்கு மத்தியில் மூன்றுகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வி அடைய முக்கிய காரணம் தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர் களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதுதான்.

இலங்கையில் தடை செய்யப் பட்டுள்ள இரட்டைமடி வலை, சுருக்குவலை, ரோலர் மீன்பிடி போன்றவற்றை தமிழக மீனவர்கள் பயன்படுத்துவதை தடுக்க ராம நாதபுரம், புதுக்கோட்டை, நாகை - காரைக்கால் மாவட்ட மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன் பிடிப்பு முறைகளை ஊக்கப்படுத் தினால் பரந்து விரிந்து கிடக்கும் வங்காள விரிகுடா, அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிறைந்திருக்கும் மீன்களை பிடிக்கலாம். இதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் உயர்வதுடன், இந்தியாவுக்கும் கோடிக்கணக்கில் அந்நியச் செலவாணியும் கிடைக்கும்.

மேலும் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றார்.

அருளானந்தம் 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in