

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட கட்டிட திட்ட அனுமதிக்கு மாறக கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் திட்ட அனுமதி பெறமால் கட்டப்படும் கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்க தொடர்புடைய வார்டு உதவி பொறியாளர் அல்லது இளைநிலை பொறியாளர், பகுதி உதவி செயற்பொறியாளர், மண்டல செயற்பொறியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய பொறியாளர்கள் தங்கள் பகுதிகளிள் கட்டுமான பணி நடைபெறும் இடங்களுக்கு சென்று கட்டுமான நிலையிலேயே கண்டிப்பாக ஆய்வு செய்து கட்டிட திட்ட அனுமதி உள்ளதா எனவும், அனுமதிப்படி கட்டுமானம் நடைபெறுகிறதா என்பதையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டிட திட்ட அனுமதி இல்லாத கட்டடங்கள் மற்றும் திட்ட அனுமதிக்கு மாறாக கட்டுமானம் நடைபெறும் கட்டிடங்களின் கட்டுமான பணியை கட்டுமான நிலையிலேயே நிறுத்த நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திட்ட அனுமதி இல்லாத கட்டிடங்கள் மற்றும் திட்ட அனுமதிக்கு மாறாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் நுழைவுவாயில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை அகற்ற நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.