Published : 22 Apr 2022 06:12 AM
Last Updated : 22 Apr 2022 06:12 AM
விழுப்புரம்: அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பதவிகளுக்கான உட்கட்சி தேர்தல் ஏப்.19-ம்தேதி தொடங்குவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், க.பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர். அதன்படி அதிமுகவின் அமைப்புரீதியான 75 மாவட்டங்களுக்கு செயலாளர்கள், நிர்வாகிகள்,பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 19, 21-ம் தேதிகளில் நடைபெற்றது.
அந்த வகையில் நேற்று விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம், தேர்தல் பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் ஜீவானந்தத்திடம் மாவட்ட செயலாளர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட அவைத்தலைவர் பதவிக்கு கண்ணன், இணை செயலாளர் பதவிக்கு ஆனந்தி அண்ணாதுரை, துணை செயலாளர்கள் பதவிக்கு எம்எல்ஏ சக்கரபாணி, நாகம்மாள், மாவட்ட பொருளாளர் பதவிக்கு கே.வி.என்.வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் தொகுதிக்கு ஒருவர் வீதம், திண்டிவனம் தேவநாதன், விக்கிரவாண்டி லட்சுமி நாராயணன், விழுப்புரம் பன்னீர் செல்வம், மயிலம்ன், வானூர் கௌரி பாலகிருஷ்ணன், செஞ்சி சுலோசனா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.இப்பதவிகளுக்கு வேறு யாரும் மனுத்தா மனோகரக்கல் செய்யாததால் இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக தலைமை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT