

தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் அருகே வாக்கா ளர்களுக்கு பணம் விநி யோகித்தது தொடர்பாக அதிமுக, திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலில், கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. காயமடைந்த 2 பேர் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டனர்.
கும்பகோணம் அருகேயுள்ள கல்லூர் ஊராட்சியில் நேற்று முன்தினம் இரவு அதிமுகவினர் மின்சாரத்தை நிறுத்திவிட்டு, வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக திமுகவினர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக இரு கட்சியி னரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அதிமுக தொகுதி இணைச் செயலாளர் என்.ஆர்.வி.எஸ்.செந்திலின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. தொடர்ந்து, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில், திமுக நிர்வாகிகள் சுரேஷ், தினேஷ் ஆகியோர் காயமடைந்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வாக்காளர் களுக்கு பணம் கொடுக்க முயன்ற புகார் மற்றும் மோதல் தொடர்பாக சுவாமிமலை போலீஸார் விசாரித்து வரு கின்றனர்.