Published : 07 May 2016 08:33 AM
Last Updated : 07 May 2016 08:33 AM

திராவிட கட்சிகளுக்கு முடிவு கட்டுங்கள்: சென்னையில் மோடி வலியுறுத்தல்

தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்த 2 திராவிட கட்சிகளுக்கும் முடிவு கட்டுங்கள். அது காலத்தின் கட்டாயம் என்று சென்னையில் நேற்று நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

பாஜக கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

தமிழகத்தில் திமுக, அதிமுக என 2 கட்சிகளின் ஆட்சியால் இளை ஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட் டுள்ளது. தமிழகத்தின் எதிர் காலத்தை நிர்ணயிக்க வேண்டிய தருணம் இது. மாநிலங்களில் ஏதா வது பிரச்சினை என்றால் மத்திய அரசுதான் உடனடியாக முதலில் இறங்கி வேகமாக செயல்படுகிறது. ஒரு அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நாட்டு மக்கள் கடந்த 2 ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியின் நடவடிக்கை மூலம் பார்த்து வருகின்றனர்.

இலங்கை தமிழர்களின் முன் னேற்றத்துக்காகவும், அவர்களின் கண்ணீரை துடைப்பதற்காகவும் யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான். இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழர்களின் வாழ்க்கையை, ராஜ்ய உறவுகளின் மூலம் காப்பாற்றினேன். ஒரு அரசு மக்களுக்காக உயிரோட்டத்தோடு எப்படி செயல்படுகிறது என்பதை சொல்லவே இதனை விளக்குகி றேன். உங்களுக்காக வாழ்ந்து உங்களோடு பயணிக்கிற அரசு வேண்டுமா, இல்லை உங்களை சிக்கலில் தள்ளுகிற அரசு வேண் டுமா என்பதை தமிழக மக்கள் இப்போது முடிவு செய்யவேண்டும்.

மக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்று 1,100 சட்டங்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம். நிலக்கரி சுரங்கத்திலிருந்து எவ்வ ளவு கொள்ளை அடிக்கலாம் என்று முந்தைய அரசு சிந்தித்தது. ஆனால், நாங்கள் எவ்வளவு நிலக்கரி எடுக்கலாம் என்று செயல்படுத்த திட்டமிடுகிறோம்.

மந்திரவாதிகளை எல்லாம் விஞ்சுகிற அளவுக்கு 2ஜி, 3ஜி என ஆகாயத்திலும் ஊழல் செய்தவர்கள்தான் முந்தைய ஆட்சியாளர்கள். நாங்கள் 2 ஜி, 3ஜியை ஏலம் விட்டு நாட்டின் வருவாயை பெருக்கியுள்ளோம்.

கடந்த 2 ஆண்டு காலமாக ஊழலுக்கு எதிராக மத்திய அரசு ஒவ்வொரு நடவடிக்கையாக எடுத்து வருகிறது. இதன் காரணத்தால் அரசு கஜானாவிலிருந்து கொள்ளை அடித்து பழக்கப்பட்டவர்களுக்கு வலிக்கிறது. அதனால் அரசுக்கு எதிராக கூச்சலிடுகிறார்கள். எப்போதெல்லாம் அவர்களின் கூச்சல் அதிகமாக இருக்கிறதோ அப்போதெல்லாம், ஊழலுக்கு எதிரான பிடியை நாங்கள் இறுக்கு கிறோம் என்று அர்த்தமாகும்.

தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்த 2 கட்சிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று சொல்லவே இங்கு வந்துள்ளேன். "இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" என்ற திருக்குறளுக்கு ஏற்ப முடிவு எடுங்கள்.

இவ்வாறு மோடி பேசினார்.

முன்னதாக நேற்று பிற்பகல் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களில் போட்டியிடும் வேட்பாளர் களை ஆதரித்து ஓசூர் அந்திவாடி யில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது பலத்த மழை பெய்தது. இருப்பி னும் தொண்டர்கள் கலையாமல் அவரது பேச்சை கேட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x