Published : 21 Apr 2022 08:02 AM
Last Updated : 21 Apr 2022 08:02 AM
சென்னை: ‘தி இந்து’ சார்பில் நடத்தப்படும் ‘ஒரு மாநிலம் ஒரு சுவை’ என்ற சமையல் போட்டியின் 3-ம் பதிப்பு ஏப்.23-ல் தொடங்குகிறது.
‘ஒரு மாநிலம் ஒரு சுவை’ சமையல் போட்டியின் தொடக்க நிலை தேர்வு தமிழகத்தில் 20 இடங்களில் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி சென்னையில் நடக்கும். முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.60 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.
இப்போட்டியின் முதல் தொடக்க நிலை தேர்வு கோவையில் வரும் ஏப்.23 காலை 10 மணிக்கு தொடங்கும். ஜென்னிஸ் ரெசிடென்ஸி, 2/2 அவிநாசி சாலை, சிவில் விமான நிலையம் அஞ்சல் என்ற முகவரியில் இது நடைபெறும். சேலத்தில் ஏப்.24-ம் தேதி காலை 10 மணிக்கு ரேடிசன்ஸ், 157/3 பெங்களூரு நெடுஞ்சாலை, மாமாங்கம் என்ற முகவரியில் நடைபெறும்.
போட்டிக்கு காய்கறி உணவுகள், இறைச்சி உணவுகள், காலை உணவு, சிற்றுண்டி, இனிப்பு வகைகள் என எதை வேண்டுமானாலும் சமைத்துக் கொண்டுவரலாம். குறைந்தபட்சம் 2 உணவுகளைசமைத்திருக்க வேண்டும். அதில் ஒன்று தமிழகத்தின் சுவையை எடுத்துக்காட்டும் வகையிலும் ‘நம்ம ஊரு நம்ம சேவரிட் பாஸ்தா’ கொண்டு சமைத்து எடுத்து வர வேண்டும். மேலும் ஆர்கேஜி நெய், கார்டியா அட்வாண்ஸ்ட் கடலை எண்ணெய், சேவரிட், எல்ஜி பெருங்காயம், நாகா உணவுப் பொருட்கள், எவரெஸ்ட் மசாலா ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் உணவுக்குக் கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும். இவற்றைப் பயன்படுத்தியதை நிரூபிக்கும் வகையில் போட்டியாளர்கள் இவற்றின் கவர்களை கொண்டு வர வேண்டும்.
கின்னஸ் சாதனையாளரும், புகழ்பெற்ற சமையல் கலை நிபுணருமான கே.தாமோதரன் (செஃப் தாமு) நடுவராகச் செயல்பட்டு, 3 பேரைத் தேர்வு செய்து சென்னையில் ஜூலை 23-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு அனுப்புவார். போட்டியில் பங்கேற்க bit.ly/OSOT2022 என்ற லிங்க் மூலம் பதிவு செய்யலாம். அல்லது NameCityDish name ஆகியவற்றை டைப் செய்து 9941255695 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அல்லது வாட்ஸ்-அப் மூலம் அனுப்பலாம். விடியம் அப்ளையன்சஸ், சேவரிட், மதுரம் நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்கின்றன. ‘தி இந்து’வுடன் ஆர்கேஜி நெய், கார்டியா அட்வாண்ஸ்ட் கடலை எண்ணெய், எல்ஜி பெருங்காயம், நாகா ஃபுட்ஸ், டிவினிட்டி, ஐடிசி மங்கள்தீப், கரூர் வைஸ்யா வங்கி, எவரெஸ்ட் மசாலா ஆகியவை ஒத்துழைப்பு வழங்குகின்றன. இந்நிகழ்ச்சியில் ஸ்பான்சராக செயல்பட 09841011949 என்ற எண்ணில் அழைக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT