Published : 21 Apr 2022 06:02 AM
Last Updated : 21 Apr 2022 06:02 AM
கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சேலம்-மேக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள இரு ரயில்வே பாலங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 23, 30-ம் தேதிகளில் (சனிக்கிழமை) கீழ்கண்ட ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
ஆலப்புழாவிலிருந்து தன்பாத்துக்கு காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:13352), 3 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு ஆலப்புழாவிலிருந்து புறப்பட்டுச் செல்லும். இதேபோல, எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12678), எர்ணாகுளத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்படுவதற்கு பதில், 12.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12244), கோவையிலிருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படுவதற்கு பதில், மாலை 4.05 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படுவதற்கு பதில், மாலை 4.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT