வாக்காளர்களுக்கு ராமதாஸ் நன்றி

வாக்காளர்களுக்கு ராமதாஸ் நன்றி
Updated on
1 min read

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: “தமிழக சட் டப்பேரவைத் தேர்தல் விரும்பத் தகாத நிகழ்வுகள் எதுவுமின்றி மிகவும் அமைதியாகவும், விறு விறுப்பாகவும் நடைபெற்று முடிந்திருக்கிறது. தமிழகத்தின் தெற்கு, மேற்கு மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களில் பலத்த மழை பெய்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்துள்ளனர்.

திராவிடக் கட்சிகள் வாக்கு களுக்காக பணத்தை வாரி இறைத்தாலும், அதைப் பார்த்து மயங்கிவிடாமல் பெரும் பான்மையான மக்கள் வாக் களித்திருக்கிறார்கள் என் பதை உணர முடிகிறது.

அதன் பயனாக தமிழகத் தில் முன்னேற்றம் ஏற்படுவது உறுதியாகிவிட்டது. வாக்காளர் கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோல், புதுவை மாநிலத்திலும் மக்கள் பெரு மளவில் வாக்களித்துள்ள னர். புதுவையில் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காக வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளி யிட்ட அறிக்கை: “சட்டப் பேர வைத் தேர்தல் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்திருக்கிறது. வாக்குப்பதிவு விகிதமும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக நான் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில் தமிழ கத்திலேயே மிக அதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில் வாக்குப்பதிவு இந்த அளவுக்கு அதிகரித் ததற்கு காரணமான மக்களுக்கு நன்றிகள். பொதுவாகவே இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு பணம் விளை யாடியது. தமிழக வாக்காளர்கள் இன்று அளித்த வாக்கு, தமிழக முன்னேற்றத்துக்கான வாக்கு ஆகும்.

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலிருந்தும் கிடைக் கும் தகவல்களைக் கொண்டு பார்க்கும்போது 50 ஆண்டுகளுக் குப் பிறகு தமிழகம் முன்னேற்றம் அடைவது உறுதி என்பது தெளி வாகிறது. இதற்கு வித்திட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள் கிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in