குப்பைக் கிடங்கில் பெண் உயிரிழந்த விவகாரம்: கோவை மாநகராட்சி, காவல் ஆணையர்களுக்கு நோட்டீஸ்

குப்பைக் கிடங்கில் பெண் உயிரிழந்த விவகாரம்: கோவை மாநகராட்சி, காவல் ஆணையர்களுக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர், மாநகரக் காவல் ஆணையருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை வெள்ளலூரைச் சேர்ந்தவர் சிவகாமி (45). துப்புரவு பணியாளரான இவர், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 7-ம் தேதி இவ்வாறு பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குப்பையை லாரியில் இருந்து கொட்டியபோது, குப்பைக் குவியலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தார். போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரப் பணியாளர் நல வாரிய மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.செல்வக்குமார் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் அளித்தார். இதன்அடிப்படையில், சிவகாமியின் இறப்புக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, நிவாரணம் குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகரக் காவல் ஆணையருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in