

பெரியகுளம் (தனி) தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி இரண்டாவது முறையாக வெற்றி பெற்று தொகு தியை தக்கவைத்துக் கொள்ளுமா? என அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பெரியகுளம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.லாசர் 76,687 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வி.அன்பழகன் 71,046 வாக்குகள் பெற்று 5,641 குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடை ந்தார்.
கடந்த முறை அதிமுக கூட்டணியில் தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இருந்தன. இம்முறை இந்த மூன்று கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து அதிமுகவுக்கு எதிராகப் போட்டி யிடுகிறது.
இத்தொகுதியில் அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட், பாமக, பாஜக, நாம் தமிழர் என 6 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த முறை தோல்வியை தழுவிய திமுக வேட்பாளர் வி.அன்பழகனுக்கு இரண்டாவது முறையாக போட்டி யிட அக்கட்சி வாய்ப்பு அளித் துள்ளது. இதேபோல் மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் ஏ.லாசர் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.கதிர்காமு போட்டி யிடுகிறார்.
கடந்த 2001, 2006-ம் ஆண்டு களில் அதிமுக இருமுறை தொடர் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுவதால் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துக் கொள்ளுமா? என அக்கட்சித் தொண்டர்கள் எதிர் பார்க்கின்றனர்.