

மதுரை: "கோடநாடு கொலை வழக்கில் காவல்துறையினர் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தால் மகிழ்ச்சி" என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அவர் மதுரையில் கூறியதாவது: "தமிழக பிரச்சினைகளில் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக கூறி அவருக்கு எதிராக அறவழியில் போராடுவது சரி. ஆனால் அறவழியை மீறி போராடுவது சரியில்லை. ஆளுநர் செல்லும் வழியில் அறவழியை மீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா வாழ்ந்த கோடநாட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்தால் மகிழ்ச்சி, கோடநாடு விசாரணையில் சசிகலா முழு ஒத்துழைப்பு அளிப்பார்" என்று தெரிவித்தார்.