தேசிய ஜனநாயக கட்சி தொடங்கினார் கலாம் அண்ணன் மகன்

தேசிய ஜனநாயக கட்சி தொடங்கினார் கலாம் அண்ணன் மகன்
Updated on
1 min read

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் அண்ணன் மகன் ஏ.பி.ஜே.எம். ஹாஜா செய்யது இபுராகிம் தேசிய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை ராமேசுவரத்தில் திங்கள்கிழமை தொடங்கினார்.

அப்துல் கலாம் மறைவுக்குப் பின்னர் கலாமின் உறவினர்களும், உதவியாளர்களும், ஆதரவா ளர்களும் பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்களும் பங்கேற்று உள் ளனர்.

அதுபோல அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முஸ்தபா கமால். இவரது மகன் ஏ.பி.ஜே.எம். ஹாஜா செய்யது இபுராகிம் (47). பொறியாளரான இவர் தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு மாநில துணைத் தலைவராக பணியாற்றி வந்தார். கலாமின் மறைவுக்குப் பின்னர் டெல்லியில் அவர் வாழ்ந்த வீட்டை தேசிய அறிவுசார் மையமாக அமைக்க வேண்டும் என கலாமின் குடும்பத்தினர் உட்பட பல்வேறு இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பாஜக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றத் தவறியதால் பாஜகவின் பொறுப்பிலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் ஹாஜா செய்யது இபுராகிம் கடந்த நவம்பர் மாதம் விலகினார்.

இதனைத் தொடர்ந்து இந்நிலை யில் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆதரவாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கலாமின் அண்ணன் மகன் ஹாஜா செய்யது இபுராகிம் அரசியலுக்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்ற ஹாஜா செய்யது இபுராகிம் புதிய கட்சியின் பெயர், கொடி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அப்துல் கலாமின் லட்சிய பயணத்தை தொடர, 'தேசிய ஜனநாயக கட்சி' என்ற புதிய கட்சியையும் அதன் கொடியையும் ராமேசுவரத்தில் அறிவித்தார். பின்னர் ஏ.பி.ஜே.எம். ஹாஜா செய்யது இபுராகிம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்கள் விரும்பும் ஆட்சி அமையவில்லை. மக்கள் விரும்பும் ஆட்சி அமையாத காரணத்தினால் உலகத்தரம் வாய்ந்த கல்வி அனைவருக்கும் கிடைக்கவில்லை.

வேலைவாய்ப்பு இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளது. கலாம் வளர்ந்த இந்தியாவை படைக்க வளமான தமிழகத்தை உருவாக்க இளைஞர்கள் தலை வர்களாக உருவாக்க வேண்டும் என்றார். அதனடிப்படையில் ஜாதி, மத, இன வேறுபாடு இன்றி அப்துல் கலாமின் லட்சிய பயணத்தைத் தொடர தேசிய ஜனநாயக கட்சியில் சேர அனைவரையும் அழைக்கின்றோம் என்றார்.

இந்தக் கூட்டத்தில் திரளான மாணவர்களும், இளைஞர்களும் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in