Published : 20 Apr 2022 06:12 AM
Last Updated : 20 Apr 2022 06:12 AM
கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அரக்கோணத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கோவையிலிருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12680), ஏப்ரல் 20,26,27-ம் தேதிகளில் காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது. எனவே, இந்த ரயில் கோவை-காட்பாடி இடையே மட்டுமே இயக்கப்படும்.
காட்பாடியில் இருந்து சென்னை வரை இயக்கப்படாது. இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12679), ஏப்ரல் 20,26,27-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து மாலை 4.20 மணிக்கு மேற்குறிப்பிட்ட தேதிகளில் கோவை புறப்பட்டுச் செல்லும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT