Published : 20 Apr 2022 06:02 AM
Last Updated : 20 Apr 2022 06:02 AM

மாநில உரிமைகள் பறிப்புக்கு துணைநின்று கருப்பு திராவிடன் எனக் கூறுவது வேடிக்கை: அண்ணாமலை மீது கி.வீரமணி விமர்சனம்

திருப்பூர்: திராவிடர் கழகத்தின் சார்பில் ’நீட்’ தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை நாகர்கோவிலில் தொடங்கி சென்னை வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் வெள்ளியங்காடு நான்கு சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி திருப்பூர் வந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலம், வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு, சமூகநீதிக்காக மாவட்டம்தோறும் பிரச்சாரம் மேற்கொள்கிறோம். வரும் 25-ம் தேதி சென்னையில் நிறைவடையும் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடப்பதை மக்களிடம் சென்று சேர்ப்பதே எங்கள் வேலை. நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், ஆளுநர் காலதாமதம் செய்வது சரியானது அல்ல.

மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது என்பது அரசியல் சட்டப்படி ஆளுநரின் கடமை. இலங்கை தமிழர்கள் கவுரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழகம் வருகிறார்கள். நீட் தேர்வு, குலக்கல்வி திட்டம், மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றுக்கு துணை நின்றுவிட்டு, கருப்பு திராவிடன் என்று பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x