

சேலம்: சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் உருவப்படத்துடன் கூடிய பேனரை வைக்க முயன்ற பாஜக-வினர் 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை வாசக சாலை தெரு தேவாங்க புரம் ரேஷன் கடையில் கரோனா காலத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மத்திய அரசு சார்பில் 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டது. இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேவாங்கபுரம் ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் உருவப்படத்துடன் கூடிய பேனரை வைக்கபாஜகவினர் நேற்று திரளாக வந்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற செவ்வாய்ப்பேட்டை இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீஸார், பாஜக-வினரை தடுத்து நிறுத்தினர். இதில் போலீஸாருக்கும், பாஜக-வினருக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, பாஜக-வினர் 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.