Published : 20 Apr 2022 06:34 AM
Last Updated : 20 Apr 2022 06:34 AM

வேன் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரம்: பள்ளி முதல்வர் உட்பட 3 பேர் பணி நீக்கம்

சென்னை: சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கடந்த மார்ச் 27-ம் தேதி பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவன் தீக்சித் உயிரிழந்தான்.

பள்ளி நிர்வாகத்தின் கவனக் குறைவாலேயே விபத்து நேர்ந்தது அதிகாரிகளின் விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, பணியில் கவனக் குறைவாக செயல்பட்ட பள்ளி முதல்வர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்துக்கு தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், விபத்துக்குகாரணமான ஓட்டுநர், வாகனத்தில் இருந்து மாணவர்கள் இறங்கிவகுப்பறைக்கு செல்வதை உறுதிப்படுத்தாத உடற்கல்விஆசிரியர் (பொறுப்பு), இவற்றை கண்காணிக்க தவறிய பள்ளி முதல்வர் ஆகிய 3 பேரையும் பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x