திராவிடர்களை சீமான் கொச்சைப்படுத்துகிறார்: ஜெயக்குமார் கண்டனம்

திராவிடர்களை சீமான் கொச்சைப்படுத்துகிறார்: ஜெயக்குமார் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அதிமுகவின் பெயரிலேயே திராவிடம் என்ற பெயர் உள்ளது. இந்நிலையில், திராவிடத்தை இழிவுபடுத்தும் விதமாக எருமை மாட்டுடன் திராவிடத்தை ஒப்பிட்டு சொல்லுவது கண்டனத்துக்குரியது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசியல்ரீதியான கருத்துகளை முன்வைத்து பேச வேண்டும். அவரின் இந்த கருத்து ஒட்டுமொத்த திராவிடர்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

தேர்தலுக்கு முன்பாக நீட் தேர்வை ரத்து செய்யும் சூட்சுமம் எங்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று ஸ்டாலின் சொன்னார். ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்றார். ஆனால், தற்போது நீட் உட்பட எல்லா பிரச்சினைக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தைதான் திமுக அரசு கூட்டுகிறது. அதிமுக மீதும், ஆளுநர் மீதும் பழிபோட்டு, தப்பிக்கவே அனைத்துக் கட்சி கூட்டத்தை ஸ்டாலின் கூட்டுகிறார் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in