

மதுரை: பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளப் பாக்கியை விரைந்து வழங்க வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்துக்கு 5 மாதங் களுக்குப் பின் மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்குச் சம்பளப் பாக்கி வழங்குவது தொடர்பாக மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு 2021 நவ.2-ல் கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு 2022 ஏப்.11-ம் தேதியிட்ட கடிதத்தில் பதிலளித்துள்ளார்.
அதில். 2021 செப்டம்பர் வரையிலான சம்பளப் பாக்கி வழங்கிவிட்டதாக பதிலளித் துள்ளார். மேலும், சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி மண்டலத் தொழிலாளர் ஆணை யர் மூலம் பிஎஸ்என்எல் ரூ.32 கோடியும், மற்றொரு ரூ. 40.94 கோடியும் தந்திருப்பதாக சொல்லி யிருக்கிறார்.
அதிலிருந்து தற்போது வரை 6 மாத கால சம்பளப் பாக்கி என்றால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும்? எனவே, மத்திய அரசும் பிஎஸ்என்எல் நிர்வாகமும் உடனடியாக ஊதிய பாக்கியை வழங்கி முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.