Published : 20 Apr 2022 06:25 AM
Last Updated : 20 Apr 2022 06:25 AM

நாகர்கோவில் அருகே பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்

மதுரை: நெல்லை-நாகர்கோவில் பிரிவில் வள்ளியூர்-ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலை நடைபெறுகிறது. இதையொட்டி ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சி-திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் (22627/22628) ஏப்ரல் 20 முதல் 29 வரை திருநெல்வேலி-திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப் படுகிறது.

தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (20691) இன்று முதல் ஏப்ரல் 28 வரை திருநெல்வேலி-நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப் படுகிறது. நாகர்கோவில்-தாம்பரம் அந்தி யோதயா விரைவு ரயில் (20692) நாகர்கோவில்-திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ஏப்ரல் 21 முதல் 29 வரை ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரி-கன்னியாகுமரி விரைவு ரயில் (16861) ஏப்ரல் 24-ம் தேதியும், கன்னியாகுமரி-புதுச்சேரி விரைவு ரயில் (16862) ஏப்ரல் 25-ம் தேதியும் திருநெல்வேலி-கன்னியாகுமரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப் படுகிறது.

சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12667) ஏப்ரல் 28-ம் தேதியும், நாகர்கோவில்-சென்னை எழும்பூர் வாராந்திர விரைவு ரயில் ஏப்ரல் 29-ம் தேதியும் திருநெல்வேலி-நாகர் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படும்.

கன்னியாகுமரி-சென்னை எழும்பூர் விரைவு ரயில் (12634) கன்னியாகுமரியில் இருந்து ஏப்ரல் 29-ம் தேதி 45 நிமிடங்கள் தாமதமாக மாலை 5.50 மணிக்குப் புறப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x