Published : 20 Jan 2014 01:13 PM
Last Updated : 20 Jan 2014 01:13 PM

ஊழல், வகுப்புவாதத்துக்கு எதிரான மாற்று அரசியலை உருவாக்க முயற்சி: காஞ்சிபுரம் கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி பேச்சு

நாட்டில் மதவாதம், ஊழல் இல்லாத அரசியலை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் சீதாராம் யெச்சூரி கூறினார்.

மக்களவை தேர்தலில் இடதுசாரிகளின் அரசியல் நிலைப்பாடு குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் சீதாராம் யெச்சூரி பங்கேற்றார். அப்போது அவரிடம் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக் குழு சார்பில் தேர்தல் நிதியாக ரூ.8.56 லட்சம் வழங்கப்பட்டது.

பின்னர் யெச்சூரி பேசியதாவது: அரசியல் கட்சிகளுக்குக் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி அளிப்பதைத் தடுத்தால்தான் நாட்டில் ஊழல் ஒழியும். அதனால் தான் கட்சிகளுக்குக் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதியளிப்பதைக் கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டு வர மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.

லோக்பால் வரம்புக்குள் கார்ப்பரேட் நிறுவனங்கள் வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அண்மையில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நிதி பெற்று அரசியல் நடத்தி வரும் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் கை கோர்த்து அத்தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. மக்கள் அரசியல் மாற்றத்துக்காக ஏங்கு கின்றனர். அதன் வெளிப்பாட்டினால்தான் டெல்லியில் ஆம் ஆத்மியால் வெற்றிபெற முடிந்தது.

ஊழல், வகுப்புவாதத்துக்கு எதிரான அரசியலை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்காக மார்க்சிஸ்ட் கட்சி முயற்சித்து வருகிறது. அதிமுக, பிஜு ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி மூலம் இது சாத்தியமாகும்.

மத்திய அரசை அமைப்பதில் தமிழகத்தின் பங்கு முக்கியமா னது. கடந்த 2004-ல் மத்தியில் வகுப்புவாத சக்தியை ஒழித்து, மாற்று அரசை அமைத்ததில் தமிழகம் முக்கியப் பங்காற்றியுள்ளது. அதனால் எங்களின் முயற்சிக்கு, தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x