

திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத் தில் நேற்று மாலை நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கரு ணாநிதி பேசியது:
வெற்றி சூழல் பிரகாசமாக இருப் பதை கடலூரிலும் பார்க்கிறேன். நான் இங்கே தேர்தலுக்காக பேச வரவில்லை. திமுக சமுதாய கட்சி யாகும். அடிதட்டு மக்களை கைதூக்கிவிடும் பாட்டாளி இயக்கம் தான் திமுக.
உங்களுக்காக உழைக்கவும், உங்களுக்காக பாடுபடவும், உங்க ளுக்காக யோசிக்கவும் எங்களுக்கு வாக்களிங்கள். கொள்ளை அடிப்ப வர்கள், வஞ்சகம் செய்பவர்களை அகற்றிட திமுகவை ஆதரிக்க வேண்டும். தமிழக மக்களை காப்பாற்ற ஒரு சில கட்சிகள்தான் இருக்கின்றன. அதில் திமுகவும் ஒன்று. திராவிடர்களான நீங்கள் திராவிட வேட்பாளர்களாகிய எங்கள் கைகளை வலுப்படுத்த வாக்களிங் கள்.
திராவிடன் உயர்ந்தால்தான் திராவிட நாடு உயரும், திராவிட நாடு உயர்ந்தால்தான் திராவிட மக்களுக்கு நல்ல வாழ்வு கிடைக் கும். திராவிட மக்கள் உயர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
கடலூரில் ஏற்பட்ட வெள் ளத்தின்போது ஆட்சியில் இருந்த முதலமைச்சர் வந்து பார்த்தாரா?, உங்கள் துயரை துடைத்தாரா?, ஆனால் எங்கள் இயக்கம் ஏழை எளிய மக்களின் தோளோடு தோள் கொடுத்து அவர்களின் துயரைத் துடைத்தது. எங்களை பலப்படுத்தினால் ஜாதி, சமயமற்ற சமநிலையை உருவாக்குவோம்.
வாக்குக்கு பணம் கொடுப் பார்கள். அது கொள்ளை அடித்த பணம். கொள்ளையடிக்க ஆட்சியில் அமர்ந்துள்ளனர். அது கொடிய குற்றமாகும். ‘ஆக்டிங் முதல்வர்’ எத்தனை கோடிகள் கொள்ளை அடித்துள்ளார் என்று பத்திரிகையில் செய்தி வருகின்றன. அவரை சிறைச்சாலையில் போட வேண்டும். இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.
மதுவிலக்கு பற்றி பேசவில்லை
நேற்று முன்தினம் இரவு புதுச் சேரி பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசினார். ‘எனக்கு தொண்டை கெட்டு போயுள்ளது - ஆனால் தொண்டு கெடவில்லை’ என்று சொல்லி பேசத் தொடங்கினார். புதுச்சேரி மற்றும் கடலூர் பொதுக்கூட்டத்தில் மதுவிலக்கு தொடர்பாக ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை.