Published : 19 Apr 2022 04:25 AM
Last Updated : 19 Apr 2022 04:25 AM

‘இசைஞானி இளையராஜா எங்கள் சொத்து’ : இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பெருமிதம்

சென்னை: ‘‘இசையமைப்பாளர் இளையராஜா எங்கள் சொத்து என பெருமையாக சொல்வேன்’’ என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மாமனிதன்’. யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இப்படத்தை ஸ்டுடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் வெளியிடுகிறார். இந்நிலையில், இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா புதுச்சேரியில் நடந்தது. இதில்நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது,

‘‘இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசை அமைக்கும் படத்தில் பணிபுரியும் வாய்ப்பு எனக்குஅமைந்திருக்கிறது. இது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இளையராஜாவின் வெறித்தனமான ரசிகன்.

இளையராஜாவின் இசை நமக்கு புரியும் போது, அறிவில் வளர்ச்சி அடைவது போல எனக்கு தோன்றுகிறது. அந்த இசை, மண் சார்ந்து இருக்கிறது. ‘இசைஞானி இளையராஜா எங்கள் சொத்து’ என்று நான் பெருமையாகச் சொல்வேன்’’ என்றார்.

யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது, ‘‘இந்த படத்துக்காக, நான் விஜய் சேதுபதியை அணுகியபோது, கால்ஷீட் இல்லை என்று கூறினார். நானும், அப்பாவும் சேர்ந்து ஒன்றாக இசையமைக்கப் போகிறோம் என்று சொல்லி சம்மதிக்க வைத்தேன். இந்த படத்தில்அப்பாவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். படத்தை நான் தயாரிப்பதால்தான் இது சாத்தியமானது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x