Published : 19 Apr 2022 06:52 AM
Last Updated : 19 Apr 2022 06:52 AM
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக உறுப்பினர் க.நா.விஜயகுமார், ஆரணி தொகுதி அதிமுக உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் தங்கள் தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: ஆரம்ப சுகாதார நிலையத்தில்இருக்கும் மருத்துவர்களுடன் காணொலி மூலம் தொடர்பு கொண்டு, அந்த மக்களையும் தொடர்பு கொள்ள வைத்து,நேரடியாக அவர்களுக்கு மருத்துவம் பார்த்து, மருந்துகளை தரும்‘இ-சஞ்சீவினி’ என்ற புதிய திட்டம்தொடங்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் 4,848மருத்துவமனைகளில் இருந்து காணொலி மூலம் மருத்துவ சேவை வழங்கப்படும். உறுப்பினர்கள் கேட்ட பகுதிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் மருத்துவ சேவை வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT