Published : 19 Apr 2016 08:47 AM
Last Updated : 19 Apr 2016 08:47 AM

வேட்பாளர்களுக்கு ஒத்துழைக்காத மாவட்டச் செயலாளர்கள்: மதுரை திமுகவில் கடும் குழப்பம்

மதுரை மாவட்டத்தில் தங்களை மீறி நிறுத்தப்பட்ட திமுக வேட்பாளர்களுக்கு மாவட் டச் செயலாளர்கள் போதிய ஒத்து ழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் எதிரொலியாக, சோழ வந்தானைப்போல் மேலும் பல சில தொகுதிகளின் வேட்பாளர் கள் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் சீட் பெற திமுக சார்பில் கடும் போட்டி நிலவியது. காங்கிரஸுக்கு திருமங்கலம் தொகுதி ஒதுக்கியதுமே குழப்பம் ஆரம்பமானது. புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலர் எம்.மணி மாறனுக்கு உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கலாம் என கரு திய நிலையில், அங்கு எம்பி கனிமொழி சிபாரிசின்பேரில் இளமகிழன் வேட்பாளராக அறி விக்கப்பட்டார். திருப்பரங்குன் றத்துக்கு மணிமாறன் மாற்றப் பட்டார்.

இதனால் இங்கு போட்டி யிட திட்டமிட்ட எஸ்ஸார் கோபி உள்ளிட்ட பலர் அதிருப்தி யடைந்தனர். தொகுதியிலேயே வசிக்காதவருக்கு சீட் வழங்கியதால், கட்சியினர் பலரும் கடும் அதிருப்தியில் உள் ளனர். மதுரை தெற்கு தொகு தியை கூட்டணிக்கும், வடக்கில் தனக்கும் போட்டியிட வாய்ப்பு கேட்டார் மாநகர் வடக்கு மாவட்டச் செயலர் வி.வேலுச்சாமி. ஆனால், வடக்கை காங்கிரஸுக்கு ஒதுக்கி விட்டு, தெற்கில் சவுராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த எம்.பாலச் சந்திரனுக்கு சீட் வழங்கப் பட்டது. இதனால் அதிருப்தி யடைந்த வேலுச்சாமி, ஆரம்பம் முதல் மு.க.ஸ்டாலின் பக்கம் இருந்த தனக்கு போட்டியிட வாய்ப்பே இல்லாமல் செய்து விட்டனரே என புலம்பி வரு வதாக கூறப்படுகிறது.

மாநகர் தெற்கு மாவட்டச் செயலர் கோ.தளபதி தனக்கு மத்திய தொகுதியை கேட்டார். ஆனால் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மகன் தியாகராஜனுக்கு மத்திய தொகுதியை ஒதுக்கிவிட்டு, மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜுவுக்கு எதிராக தளபதியை நிறுத்தியுள்ளதால் அவரும் அதருப்தியில் உள்ள தாக கூறப்படுகிறது.

சோழவந்தான் தொகுதியில் தனது ஆதரவாளரை வேட்பாள ராக்க திட்டமிட்டார் மூர்த்தி. ஆனால், கட்சி தலைமைக்கு வேண்டப்பட்ட டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி நிறுத்தப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த மூர்த்தி அவரை ஒருமை யில் திட்டியதுடன், தேர்தல் பணியையும் ஒருங்கிணைக் கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அதிருப்தியில் வேட்பாளர் போட்டியிலிருந்தே விலகிக்கொண்டதால் கட்சி தலைமை அதிர்ச்சிடைந்தது. ஆனாலும், வாய்ப்பை பயன் படுத்திக்கொண்ட மூர்த்தி தனது ஆதரவாளரான பவானியை வேட் பாளராக்கிவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் சிக்கல் கடுமையாகியுள்ளது.

தங்கள் ஆதரவாளர்கள் வேட் பாளராக இல்லாத நிலையில், இவர்களுக்கு எதிராக மாவட்டச் செயலர்களே செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் தியாகராஜ னுக்கு கடுமையாக பணியாற்றும் படி ஸ்டாலினும், தான் சொல் லும்வரை யாருக்கும் ஆதரவாக பணியாற்றக்கூடாது என அழ கிரியும் மாறி மாறி போனில் பேசி வருவதாகவும் கூறப்படு கிறது. இப்படி பல்வேறு பிரச்சி னைகளால் மதுரை திமுகவில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பரபரப்பு காணப்படுகிறது.

ஆர்ப்பாட்டம்

மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தியைக் கண் டித்து நேற்று வாடிப்பட்டியில் கட்சி நிர்வாகிகள் சிற்றரசு, ஜெக நாதன், ராஜாராம் தலைமையில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத் தினர். அவர்கள் கூறும்போது, ‘‘வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஸ்ரீபிரியா தேன்மொழியை அவர் மனம் புண்படும்படி மூர்த்தி ஒருமையில் பேசியதால் தானாக முன்வந்து விலகிக்கொண்டார். அவருக்குப் பதிலாக நேர் காணலிலேயே பங்கேற்காத பவானி நிறுத்தப்பட்டுள்ளார். இவரது கணவர் சின்னக்கருப்பன் மீது கோபுர கலசத்தை திருடி யதாக கல்லல் காவல் நிலை யத்தில் வழக்கு உள்ளது. மேலும் மும்பையில் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதற் கான ஆதாரம் உள்ளது. இது குறித்து தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x