

சென்னை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தனது கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளது. மத்திய அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக திட்டமிட்டு தமிழகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். அதை, இளையராஜாவின் கருத்து மாற்றிவிடும் என்பதால்தான் அவரை இழிவுபடுத்துகின்றனர். மோடி குறித்து இளையராஜா சொன்னது இயல்பான கருத்து. ஆனால், இணைப்பு மொழி குறித்து ஏ.ஆர்.ரகுமான் சொன்னது உள்நோக்கம் கொண்டது.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சிகூட திமுகவில் இல்லை. திமுகவினர் அதிகார வரம்பை மீறி பேசுகின்றனர்.
திராவிடம் என்பது இனமா,இடமா? நானும் திராவிடன்தான். ராமாயணம் கட்டுக்கதை, ஆனால்,ராவணன் திராவிடனா? குஜராத்கூட திராவிட பிரதேசம்தான், எனவே, பிரதமரே திராவிடர்தான். ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணாமலை அனைவருமே திராவிடர்கள்தான். எனவே, திராவிடர்தான் தமிழகத்தை ஆள்வார்கள். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.