Published : 16 Apr 2016 08:24 AM
Last Updated : 16 Apr 2016 08:24 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.192 குறைந்தது

சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்துள்ளதால், சென்னையில் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.192 குறைந்து ரூ.21 ஆயிரத்து 968க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலை மாற்றம், பங்குசந்தை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. இதற்கிடையே, சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று கணிசமாக குறைந்திருந்தது. இதனால், சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.192 குறைந்து ரூ.21 ஆயிரத்து 968க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 746க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 770க்கு விற்கப்பட்டது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x