Published : 18 Apr 2022 06:22 AM
Last Updated : 18 Apr 2022 06:22 AM
விழுப்புரம்: தமிழகத்தில் மத வெறியை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடபாஜக திட்டமிட்டுள்ளதாக அமைச் சர் பொன்முடி குற்றச்சாட்டு தெரி வித்துள்ளார்.
விழுப்புரத்தில் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் அமீர் அப்பாஸ் தலைமையில் நேற்று மாலை நடை பெற்றது. அப்துல் சத்தார் காஷ்பீ முன்னிலை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாநில வர்த்தக அணி அப்துல்ஹக்கீம் வரவேற்றார்.
எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், ரவிக்குமார் எம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியது:
சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத் தில் திராவிட மாடல் அனைவரும் பின்பற்ற வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். அதனை நாம் பின்பற்ற வேண்டும். பாஜக மதக்கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட திட்டமிட் டுள்ளது. மதவாதத்தை தடுத்து நிறுத்த சாதி, மதத்தை கடந்து அனைவரும் குரல் கொடுக்கவேண்டும். இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் ஒதுக்கீடு கொடுத்தது திமுக ஆட்சியில் தான். இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வணிகத்துறையில் உள்ளனர். அவரது பிள்ளைகள் படிக்க முன்வர வேண்டும். குறிப்பாக பெண் பிள்ளைகள் படிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், திமுக பொருளாளர் ஜனகராஜ், புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், மனிதநேய மக்கள் கட்சிஅப்பாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சரவணன், திமுக நிர்வாகிகள் கல்பட்டுராஜா, தினகரன், ஸ்ரீவினோத், நகராட்சி துணைத் தலைவர் சித்திக்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT