மலிவு விலையில் கிடைக்கும் மாநகராட்சியின் இயற்கை உரம் 

மலிவு விலையில் கிடைக்கும் மாநகராட்சியின் இயற்கை உரம் 
Updated on
1 min read

சென்னை: மாநகராட்சி தயார் செய்துள்ள இயற்கை உரம் மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் 5000 டன் மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நுண் உரமாக்கும் மையங்கள் இந்த உரம் மிகவும் இயற்கையான முறையில் தயார் செய்யப்படுகிறது. இந்த உரத்தை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்கா உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி இன்றைய தினம் சென்னை மாநகராட்சி உள்ள பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ உரம் ரூ.15 முதல் ரூ.20 விற்பனை செய்யப்பட்டது. இதைப்போன்று வரும் நாட்களில் உர விற்பனையை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in