

பொறியியல் படிப்பில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் இடங்கள் பொது கவுன்சலிங் மூலம் நிரப்பப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.ராஜாராம் தெரிவித்தார்.
பொறியியல் படிப்பில் விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக் கான கவுன்சலிங் முடிவடைந்த நிலையில், மாற்றுத் திறனாளி களுக்கான கவுன்சலிங் அண்ணா பல்கலைக்கழகத்தில் புதன் கிழமை நடந்தது.
தரவரிசைப் பட்டியலில் முத லிடம் பெற்ற கார்த்திக், இரண் டாம் இடத்தைப் பிடித்த இந்துமதி, மூன்றாம் இடம் பெற்ற சபரிபிர காஷ் ஆகியோருக்கு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராம் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
1.76 லட்சம் இடங்கள்
பொது கவுன்சலிங் மூலமாக ஒரு லட்சத்து 76 ஆயிரம் பி.இ., பி.டெக். இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு உண்டு. அதன்படி, அவர்களுக்கு 5,021 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 385 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 305 பேர் தகுதிபெற்றனர்.
பொறியியல் படிப்புக்கான இடங்களை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதுபற்றிய அறிவிப்பு நாளை (இன்று) வெளியிடப்படும்.
இவ்வாறு துணைவேந்தர் ராஜாராம் கூறினார்.
கவுன்சலிங் நிகழ்ச்சியில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொது கவுன்சலிங் நாளை தொடக்கம்
விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கவுன்ச லிங் நடந்து முடிந்துள்ள நிலை யில், பொதுவான கவுன்சலிங் (அகடமிக்) நாளை (வெள்ளிக் கிழமை) தொடங்குகிறது.
கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சலிங் தேதி, நேரம் ஆகிய விவரங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டு உள்ளன. சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அழைப்புக் கடிதமும் எஸ்.எம்.எஸ். தகவலும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த கவுன்சலிங் ஜூலை 28-ம் தேதி நிறைவடைகிறது.