Last Updated : 22 Apr, 2016 07:54 AM

 

Published : 22 Apr 2016 07:54 AM
Last Updated : 22 Apr 2016 07:54 AM

தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டப்பேரவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

கேரள சட்டப்பேரவை தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி நிறைவடைகிறது. வரும் 30-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்குகிறது. மே 2-ம் தேதி வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்.

இதனிடையே, தேர்தல் நடவடிக் கைகளை பல்வேறு முறைகளில் கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மொபைல் அப்ளிகேஷன் சார்ந்த வாக்குப் பதிவு கண்காணிப்பு, வீடியோ பதிவு, வெப்கேமரா மூலம் ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக் கைகள் மூலம் வாக்குப் பதிவு கண்காணிக்கப்பட உள்ளது.

வாக்குப்பதிவு நாளுக்கான கண்காணிப்பு, அதற்கு முந்தைய நாளே தொடங்குகிறது. வாக்குப் பதிவு தொடர்பான தகவல்களை வாக்குச் சாவடிகளில் இருந்து ஆண்ட்ராய்டு மற்றும் எஸ்எம்எஸ் மூலம் எளிதாக பெற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேர்தல் நாள் நெருங்குவதை யடுத்து, கேரளாவில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

மொத்தம் 140 தொகுதிகள்

கேரளாவில் மொத்தம் 140 தொகுதிகளுக்கு தேர்தல் நடை பெறுகிறது. இடதுசாரி ஜனநாயக முன்னணியின் பிரதான தேர்தல் முகமாக 93 வயதாகும் வி.எஸ். அச்சுதானந்தன் முன்னிறுத்தப் பட்டுள்ளார்.

ஆளும் காங்கிரஸ் கூட்டணி தரப்பில் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் மாநில தலைவர் சுதீரன், உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் நட்சத்திர பிரச்சாரகர்களாக வலம் வருகின்றனர்.

பாரத் தர்ம ஜன சேனா மற்றும் சில சிறிய கட்சிகளின் துணையுடன் தேர்தலைச் சந்திக்கிறது பாஜக. முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.ராஜகோபால் (86), கட்சியின் மாநில தலைவர் கும்மனூன் ராஜ சேகரன், வி.முரளிதரன், ஷோபா சுரேந்திரன் உள்ளிட்டோர் பாஜக வின் முக்கிய வேட்பாளர்கள்.

கேரள தேர்தலில் 35 ஆயிரத்து 946 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் 21 ஆயிரத்து 498 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

மனுவுடன் அளிக்க வேண்டியவை

1. வேட்பு மனு (படிவம்-2)

2. உறுதிமொழிப் படிவம் (படிவம்-26)

3. பாக்கியின்மை சான்றாக கூடுதல் உறுதிமொழிப் படிவம்

4. சான்றொப்பமிடப்பட்ட வாக்காளர் பட்டியல் (வேறு தொகுதியில் வாக்காளராக இருந்தால்)

5. உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சாதிச் சான்றிதழ் (பட்டியல் இனத்தவர், பழங்குடியினரை சார்ந்தவராக இருந்தால்)

6. ரூ.10 ஆயிரம் டெபாசிட் கட்டணம்

7. பட்டியல் இனத்தவர், பழங்குடியினராக இருப்பின் இதில் பாதித்தொகை ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். பொதுத்தொகுதிக்கும் இது பொருந்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x