

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இக்கட்சியின் பல்லாவரம் தொகுதி வேட்பாளராக பம்மல் ராஜா என்ற ராஜரத்தினம் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் நேற்று காலை 11.30 மணியளவில் பல்லாவரம் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு வந்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் தேர்தல் செலவினங்களைப் பராமரிக்கும் வகையில் தனி வங்கிக் கணக்கு தொடங்கியதற்கான உறுதிமொழியை அளிக்க வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரான ராஜரத்தினம் அதுபோன்று வங்கிக் கணக்கு தொடங்கியதற்கான உறுதிமொழியை அளிக்க இயலவில்லை.
எனவே, “வங்கிக் கணக்கு தொடர்பான ஆவணங்களை எடுத்து வருகிறேன்” என்று தேர்தல் அலுவலகத்தில் சொல்லிவிட்டு மனு தாக்கல் செய்ய முடியாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.