Published : 17 Apr 2022 04:32 AM
Last Updated : 17 Apr 2022 04:32 AM
தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் 17, 18-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும்.
19-ம் தேதி தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிமாவட்டங்கள், ஈரோடு. தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், 20-ம் தேதி கடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT