

கோவையில் நிருபர்களிடம் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியதாவது:
கொமதேக 72 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. இருகட்டங்களாக 51 வேட்பாளர்களை அறிவித்துள்ளோம். இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (ஏப்.19) வெளியிடப்படும். கொங்கு மண்டலத்தின் வருவாய் முழுவதும் இங்குள்ள மக்களுக்கே பயன்பட வேண்டுமென்றால் கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக்க வேண்டும். தமிழகத்தை இரண்டாகப் பிரித்து கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும். எங்களது ஆதரவை கட்சிகள் கோரும்போது தனி மாநிலக் கோரிக்கையை முன்வைப்போம்’’ என்றார்.